யாழில் 28 நாட்களேயான சிசு உயிரிழப்பு!
[2024-03-23 15:29:48] Views:[15]
யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று நேற்று (22) உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்ற போது சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.










