விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!
[2024-03-23 12:11:08] Views:[10]
இன்றையதினம் (22) புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனமடுவயிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியும், புத்தளத்தில் இருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் இடையில் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் 3 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.










