மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றவர் உயிரிழப்பு!
[2024-03-22 20:33:52] Views:[11]
அக்குரஸ்ஸ திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த நபர் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயனம் செய்துள்ளார் எனினும், சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார்
இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










