யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை.
[2024-03-22 15:27:52] Views:[11]
ஜனாதிபதி ரணில்க்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் வரவேற்றதுடன், கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள் கையளிக்கவுள்ளார்.
அத்துடன்,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட்து.










