யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில் குடைசாய்ந்த எரிபொருள் கொள்கலன்
[2024-03-22 12:03:03] Views:[10]
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதி, கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன் எரிபொருள் கொள்கலன் ஒன்று குடைசாய்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விபத்தால் வீதிக்கு குறுக்கே கொள்கலன் காணப்பட்டதாலும் அப்பகுதியில் எரிபொருள் சிந்தியிருந்ததாலும் சிறிது நேரம் போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்தன. விபத்தில் உயிர்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதுடன் அருகில் சென்ற பேருந்து ஒன்றின் கண்ணாடியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.










