யாழ் வர்த்தகரை ஏமாற்ற நினைத்த தென்னிலங்கை வர்த்தகர்.
[2024-03-22 09:36:01] Views:[10]
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் , 50 இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு , பணத்தினை வழங்காது மோசடி செய்த குற்றச்சாட்டில் காலி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் போது,
யாழில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் 25 கிலோ எடையுள்ள 1200 அரிசி மூடைகளை காலியில் உள்ள மொத்த விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
விற்பனையாளருக்கும் , கொள்வனவாளருக்கும் இடையில் தரகராக ஒருவர் செயற்பட்டுள்ளார். அரிசி மூடைகளை யாழில் இருந்து , காலி பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்த பின்னர், அரிசி மூடைக்கான பணத்தினை கோரிய போது , பணத்தினை தாம் இடை தரகரிடம் வழங்கியதாக கூறியுள்ள நிலையில் பணம் விற்பனையாளரிடம் வந்தடையாததனால் , அவர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அரிசி மூடைகளை கைப்பற்றிய பொலிஸார் அவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்ததுடன் , உரிமையாளரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அரிசியை கொள்வனவு செய்தவரை பிணையில் செல்ல அனுமதியளித்து , கைப்பற்றிய அரிசி மூடைகளை விற்பனை செய்த நபரிடம் மீள கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.










