யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவர் கைது.
[2024-03-21 21:31:55] Views:[11]
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட போதிலும் மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பெயரினால் விசாரணை செய்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதி மன்றத்தில் முன்னிருதினர்.










