கஞ்சா பீடியுடன் ஒருவர் கைது!
[2024-03-21 10:32:57] Views:[10]
நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.
நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










