உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டியை தயாரித்த யாழ்பாண தமிழன்.
[2024-03-17 11:01:14] Views:[14]
யாழில் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக தாத்தா ஒருவர் மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்துள்ளார். இந்த முச்சக்கர வண்டியானது மோட்டார் பொருத்தினால் இயங்கக் கூடியவாறு இருக்கும் என இதனை உற்பத்தி செய்தவர் கூறுகின்றார்.
இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,''.இதனை செய்வதற்கு எனக்கு 25 நாட்கள் தேவைப்பட்டன. சிறுவர்களுக்கான அனைத்து வாகனங்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான முச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படுவதில்லை. என்னுடைய வேலையும் முச்சக்கர வண்டி திருத்தம் செய்வது தான்.முழுவதும் கையாலேயே இந்த முச்சக்கர வண்டியினை தயாரித்து முடித்துள்ளேன். இதற்கு எனது மகன்களும் உதவி செய்தார்கள். இதனை உருவாக்க எனது கூலி தவிர 175000/= ரூபா செலவாகி உள்ளது'' என்றார்.
இந்த முச்சக்கர வண்டியை பார்வையிடுவதற்கு ஏராளமானோர் வருகை தருவதாக கூறப்படுகின்றது.










