இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீரி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 19 பேர் கைது.
[2024-03-17 10:45:09] Views:[13]
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று(17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டபோது கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு படகில் 12 கடற்றொழிலாளர்களும், மற்றைய படகில் 7 கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலில் ஈடுபட்டபோது கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.










