யாழில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர்.
[2024-03-16 19:18:31] Views:[10]
நேற்று முன்தினம் (15) யாழ்.நவக்கிரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோர் குண்டு வீசி தீயிட்டு எரித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










