சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து பலி
[2024-03-16 19:05:16] Views:[9]
நேற்று (15) காலை மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் 06 வயதுடைய சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
சிறுமி மீட்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது










