இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது...!
[2024-03-15 21:26:34] Views:[9]
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம்-காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின் அவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்திய கடற்றொழிலாளர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










