yarlathirady.com

தனது பிள்ளையை இலங்கைப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு துபாய் பறக்க முயன்ற சீன தாய்..!

[2024-03-13 22:06:37] Views:[9]

தனது மகளை இதற்கு முன் பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி செல்ல முயன்ற சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று(12) கைது செய்யப்பட்டுள்ளார்.35 வயதுடைய குறித்த சீன பெண், தனது 58 வயது தாயுடன் துபாயில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.இவர் ஒரு சீன பிரபல நடனப் பெண் எனவும், அவருக்கு 3 வயது மற்றும் 6 மாதமுடைய இரட்டை மகள்மார்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இலங்கைப் பெண், துபாயில் உள்ள சீனப் பெண்ணின் வீட்டில் பணிபுரிந்துள்ளதுடன், அவரது பிள்ளைகளையும் பராமரித்து வந்துள்ளார். இவர் தனது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு அண்மையில் தாயகம் திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த சீன பெண், இலங்கைப் பெண்ணிடம் தொடர்புகொண்டு,தான் இலங்கைக்கு சுற்றுலா செய்ய உள்ளதாகவும், அவர்களை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.

இந்த சீனப் பெண், அவரது தாய், இளைய மகள் அனைவரும் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், இலங்கையில் உள்ள பணி பெண் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.இதையடுத்து இந்த சீனப் பெண், தனது இளைய மகளை இலங்கை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.தொடர்ந்து துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சீன பெண்ணையும் அவரது தாயையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்கனை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.