நேற்றிரவு கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி
[2024-03-13 12:24:39] Views:[9]
நேற்றிரவு(12) யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.










