புத்தாண்டில் இருந்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,அஸ்வெசும இலவச அரிசி விநியோகம்.
[2024-03-11 22:00:26] Views:[10]
அரச ஊழியர்களின் சம்பளத்தில் 10 000/= ரூபா அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.குளியாப்பிட்டியவில் நேற்று(10) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது.எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
எதிர்வரும் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20KG அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் சிங்கள- தமிழ் புத்தாண்டில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் 10 000/= ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.










