yarlathirady.com

சாதனைமேல் சாதனை படைக்கும் தமிழன்.

[2024-03-11 15:15:29] Views:[22]

இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார். வரலாற்றில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்படாத, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 100வது போட்டியில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்படாத சிறந்த ஒரு பந்துவீச்சாக இது மாறியது.

இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் 128 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் படைத்திருந்த 141 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை தகர்த்து அசத்தியுள்ளார். அதேசமயம் இந்தியாவிற்கு அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்து 36 முறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.