யாழில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட அடியவர்களுக்கு இராணுவத்தினரால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி உபசாரிப்பு.
[2024-03-10 21:24:36] Views:[10]
இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் மகாசிவராத்திரி தினமானது நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இந்து ஆலயங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (08) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.அந்தவகையில், யாழ்ப்பாணம்,வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு சிறப்பாக நடைபெற்றது.
இவ் வழிபாடுகளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்ட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அப் பிரதேசத்திலுள்ள இராணுவத்தினர் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உபசரித்தனர்.அதேவேளை, குறித்த ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டிலும் சிவில் உடையில் இராணுவத்தினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










