எண்ணிலடங்கா பக்தர்களுடன் இடம் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா சிவராத்திரி நிகழ்வு.
[2024-03-09 16:00:37] Views:[11]
வரலாற்றுப் புகழ் பெற்ற தளங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று(8) வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த இலட்சக்கணக்கான சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு பட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்ற வேலை இலங்கை மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை அறிய வந்துள்ளது.










