அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.
[2024-03-09 15:03:19] Views:[11]
நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிருவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.நேற்று (08.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சதொச பால் மா, காய்ந்த மிளகாய், சிவப்பு அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
சதொச பால் மாவின் விலை 125 ரூபா விலை குறைக்கப்பட்டு 935 ரூபாவுக்கும்,காய்ந்த மிளகாய் விலை 15 ரூபா குறைக்கப்பட்டு 1,175 ரூபாவுக்கும்,பச்சரிசியின் விலை 5 ரூபா குறைக்கப்பட்டு 195 ரூபாவுக்கும்.மேலும் வெள்ளை சீனி விலை 3 ரூபா குறைக்கப்பட்டு 272 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.










