யாழில் சுகாதாரமற்று இயங்கிய உணவகத்திற்கு சீல்
[2024-03-09 11:43:15] Views:[10]
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுகாதார முறைக்கேடுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்க்கு, 73000 ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்றம், குறித்த உணவகத்தை சீல் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழு உணவகங்களில் திடீரென சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் போது 180Kg பழுதடைந்த ரொட்டிகள் , 05Kg இடியப்பம் மற்றும் 08Kg பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டியில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உணவாக உரிமையாளருக்கு 73000 ரூபாய் தண்டம் விதித்து உணவகத்தை சீல் வைத்து மூடுமாறும் உத்தரவிட்டது.
பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் என்பவற்றை களஞ்சியப்படுத்திய உரிமையாளருக்கு 20 000 ரூபாய் தண்டமும், பழுதடைந்த இறைச்சி ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33000 ரூபாய் தண்டமும் நீதிமன்று விதித்துள்ளது.அதேவேளை மல்லாகம் நீதவான் மூலம் உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.










