உலக வங்கியின் வெளியிட்ட பட்டியலில் இலங்கை தமிழ் பெண்கள்
[2024-03-08 11:48:53] Views:[10]
தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்த பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர்.11 பேர் அடங்கிய குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பெண்கள் என்பது விசேட அம்சமாகும்.
முக்கிய பதவிகளை வகிப்பதில் சிறந்த ஆளுமைகளை (#ClearHerPath) என்ற ஹாஷ் டாக்குடன் உலக வங்கி வெளியிட்டுள்ளது.விழுது என்ற சிவில் சமூக அமைப்பிற்கு தலைமை வகிக்கும் மைத்ரேயி ராஜசிங்கம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கஸ்தூரி வில்சன் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள், கல்வி ,ஊதியம் இல்லாத வேலை மற்றும் குடும்ப பராமரிப்புப் பொறுப்புகளின் நேரத்தைச் செலவழிக்கும் சுமை உள்ளிட்ட பல தடைகளை தெற்காசியப் பெண்கள் தொழிலில் ஈடுபடுவதில் தடைகளை எதிர்நோக்குகின்றனர்.எனினும், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கான பாதையைத் உருவாக்குவதற்கு, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பங்களிக்க முடியுமென உலக வங்கி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.










