இரண்டே மாதத்தில் 40 லட்சம் ரூபாய் வருமானம்! இலங்கை விவசாயிக்கு அடித்த யோகம்.
[2024-03-07 15:40:10] Views:[13]
அனுராதபுரத்தில் தர்பூசணி செய்கை மூலம் விவசாயி ஒருவர் லட்சாதிபதியாக மாறியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி செய்கையின் மூலம் இரண்டே மாதத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளார். ஊறாகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய விவசாயின் தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
மழைக்காலத்தில் விவசாயிகள் தர்பூசணி பயிரிடாவிட்டாலும், அதிக மழை பெய்த டிசம்பர் மாதத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர் இதனை வெற்றிகரமாக செய்து இலாபம் ஈட்டியுள்ளார்.ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிர் செய்கையில் சுமார் 20 ஆயிரம் கிலோ அறுவடையை பெற்றுள்ளார். அவற்றினை கிலோ 180 ரூபாவிற்கு விற்பனை செய்ததன் மூலம் இந்த உயர் வருமானத்தைப் பெற்றுள்ளார். அதற்கமைய, சந்தை மதிப்பின் அடிப்படையில் அவர் இவ்வளவு அதிக வருமானத்தை பெற முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.










