யாழில் துயர்: நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
[2024-03-06 05:57:45] Views:[10]
யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வரணி, மாசேரி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே நேற்று முந்தினம் (04) மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் இவ்வறு உயிரிழந்துள்ளது.
சளி காரணமாக இரட்டை குழந்தைகளுக்கும் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.










