நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!
[2024-03-05 08:56:13] Views:[10]
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 447 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 257 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.










