மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்பட்டது!
[2024-03-05 06:58:27] Views:[13]
மின்சார கட்டணம் நேற்று (04) நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.










