yarlathirady.com

புவியின் உள் மையமான கோர் ( Core) எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது

[2023-02-07 12:17:58] Views:[17]

பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.இயற்கை பேரிடர்களுக்கும் இந்த கோர் பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது. எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த கோர் பகுதி காரணமாகவே ஆகும்.



இதுபற்றி விஞ்ஞானிகள் கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள். முதல் பகுதியான நாம் வாழும் பகுதி கிறஸ்ட் என்றும் இரண்டாவது மேன்டில் என்றும் மூன்றாவது மையப்பகுதி கோர் என்றும் அழைக்கிறார்கள். தற்போது மையப்பகுதியான கோர் பகுதி பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர்.



உள் மைய சுழற்சியின் தலைகீழ் மாற்றமானது ஒரு வருடத்தில் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதியால் நாளின் நீளத்தை குறைக்கும் என கூறப்படுகிறதுடன் பூமியின் காந்தப்புலத்தில் சிறிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 km கீழே உள்ளது. "கிரகத்திற்குள் உள்ள கிரகம்" என அழைக்கப்படும் இந்த திரவ உலோக மையம் தானாகச் சுழலக் கூடிய அமைப்பாக உள்ளது.



கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள் வறை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தது புவியின் உள் மையத்தின் இயக்கங்களைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். இவ் ஆய்வின் ஆசிரியர்களான, சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி 2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.